தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

இளையான்குடி தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இளையான்குடி
இளையான்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது தலைமையில் சாலைக்கிராமம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு.செல்வராஜன், நகர் செயலாளர் நைனா முகமது, பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், நடராஜன், குணசேகரன், ஜெகநாதன், பாலகிருஷ்ணன், திலகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாணவரணி அமைப்பாளர் சாமிவேல் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், ஒன்றிய பொருளாளர் சித்திரை வேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிறைவாக கணபதி நன்றி உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட, பிரதிநிதிகள் ரவிச்சந்திரன், தயாளன், சேவியர், செய்யது கான், யாசர், இளைஞரணி நிர்வாகிகள் ராஜீவ் காந்தி, தனசேகரன், பிரபு, கவுன்சிலர்கள் முருகானந்தம்செல்வி சாத்தையா, மலையரசி ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






