தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
இளையான்குடி
இளையான்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய பொருளாளர் ஆரோக்கியதாஸ் தலைமையில் சூராணம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர்கள் செழியன், சூலியாள் பவுல், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதா ரெத்தினம், நித்தியா கமல், முனீஸ்வரி கணேசன், அமுதா சந்தியாகு, ராமலெட்சுமி முருகேசன் மற்றும் மகளிர் அணி தலைவி சகாயமேரி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், விவசாய அணி காளிமுத்து, கவுன்சிலர் முருகானந்தம், தலைமை கழக பேச்சாளர் வீரா.வெள்ளைச்சாமி சிறப்புரையாற்றினர். சூராணம் கிளை செயலாளர் ஜான் போஸ்கோ நன்றி உரை நிகழ்த்தினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், துணைச் செயலாளர் ராஜேந்திரன், அவைத்தலைவர் ரெகுநாதன், சார்பு அணி நிர்வாகிகள் கோபால், பிச்சைமுத்து, ராஜ்குமார், கவிதா, செல்வேந்திரன், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சார்பு அணி, மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.