தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
திருப்புவனம்
திருப்புவனம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம், கீழடியில் ஒன்றிய செயலாளர் வசந்திசேங்கைமாறன் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர் கனி முன்னிலை வகித்தனர். அனைவரையும் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சங்கர் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை கழக சொற்பொழிவாளர் சிவகங்கை மணிமுத்து, மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் ஆகியோர் பேசினா். கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, மாவட்ட பிரதிநிதிகள் பிச்சைமணி, ஈஸ்வரன், சுப்பையா, அக்கினிராஜ், ஒன்றிய நிர்வாகிகள் ரவி, சக்திமுருகன், மகேந்திரன், ராமு, இளங்கோவன், தினகரன், சேகர், மீனாட்சி சுந்தரம், கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோபால், பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தேவதாஸ், அறிவுக்கரசு, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், வேல்பாண்டி, ஷேக் முகமது மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை, வட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.