பொதுக்குழு கூட்டம்
பொதுக்குழு கூட்டம்
ராமநாதபுரம்
தொண்டி
திருவாடானையில் சிவகங்கை மறை மாவட்டம் தலித் பணிக்குழுவின் பொதுக்குழு நிர்வாகிகள் நியமனக் கூட்டம் தலித் பணிக்குழு செயலாளர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. களப்பணியாளர் ஜெபமாலை மேரி வரவேற்றார். பொதுக்குழு நோக்கம் குறித்து கண்காணிப்புக்குழு உறுப்பினர் சவரிமுத்து ஆசிரியர் விளக்கினார்.
கண்காணிப்பு குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் தேர்தலை நடத்தினார். இதில் பணிக்குழுவின் துணைத் தலைவராக சவரிமுத்து, இணைச் செயலாளராக அலெக்சாண்டர் துரை, உதவி செயலராக மதி,, பொருளாலராக பிரான்சிஸ், உதவி பொருளாலராக மெர்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தநிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் செய்திருந்தார்.
Related Tags :
Next Story