ஜூன் 23ம் தேதி பொதுக்குழு கூட்டம் : அதிமுக நாளை மறுநாள் ஆலோசனை
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை,
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் வரும் 14ஆம் தேதி ஆலோசனை நடைபெறுகிறது
பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள், தீர்மானங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் .
அதில் கூறப்பட்டுள்ளதாவது ;
நாளை மறுநாள் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு தொடர்பாகஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story