பா.ம.க.பொதுக்குழு கூட்டம்


பா.ம.க.பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)

குத்தாலம் மேற்கு ஒன்றிய பா.ம.க.பொதுக்குழு கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மாதிரிமங்கலம் கிராமத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை பா.ம.க. மாவட்ட செயலாளர் சித்தமல்லி ஆ.பழனிசாமி ஆலோசனைப்படி குத்தாலம் மேற்கு ஒன்றிய பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அ.மதன்ராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் செந்தில், அன்பழகன், ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி சுதாகர் வரவேற்றார். இதில் பா.ம.க. மயிலாடுதுறை மாவட்ட பொருளாளர் தேவிகுருசெந்தில், குத்தாலம் பேரூர் செயலாளர் வக்கீல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில், 2026-ல் அன்புமணியை முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்க பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பாடுபட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதல் அன்புமணி தம்பிகள் படை நிர்வாகி கணபதி, ஒன்றிய துணை செயலாளர் முருகன், திருவாவடுதுறை கிளை செயலாளர் சந்தோஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாதிரிமங்கலம் கிளை தலைவர் தமிழ்மணி நன்றி கூறினார்.


Next Story