பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்


பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை, கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை மனுக்களாக கொடுத்து பயனடையலாம். இ்வ்வாறு அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story