பொது தொழிலாளர் சங்க மே தின விழா


பொது தொழிலாளர் சங்க மே தின விழா
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்க மே தின விழா நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மே தின விழா நடந்தது. விழாவிற்கு சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஜெகவீரபாண்டியன் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் வைத்தீஸ்வரன்கோவில் சாமிநாதன், ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ஜெகமணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் அப்பர்சுந்தரம் வரவேற்றார். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் எம்.எல்.ஏ. சத்தியசீலன், தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் இமய நாதன், முருகமணி, சேதுரவிக்குமார், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் காலணி தொழிலாளர்கள் சங்கம், லோடு ரிக் ஷா சங்கம், செங்கல் சூளை தொழிலாளர் சங்கம், ஓவியர் சங்கம், நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம், பொது தொழிலாளர் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க துணை செயலாளர் குருசங்கர் நன்றி கூறினார்.


Next Story