லாடவரத்தில் பொது மருத்துவ முகாம்


லாடவரத்தில் பொது மருத்துவ முகாம்
x

லாடவரத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள நியூ ஜி.வி.மருத்துவமனை மற்றும் லாடவரம் ஊராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் லாடவரம் கிராமத்தில் நடந்தது. மருத்துவமனை தலைவர் பாலாஜி லோகநாதன் தலைமை தாங்கினார். மருத்துவமனை இயக்குனர் தினேஷ், ஊராட்சி மன்ற தலைவர் தங்கமணி, ஒன்றிய கவுன்சிலர் கஜபதி, துணைத் தலைவர் லட்சுமி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜி.வி. மருத்துவமனை மருத்துவ குழுவினர்கள் கலந்துகொண்டு பொது மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். முகாமில் 150-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story