கே.வி.குப்பம் அருகே கெங்கையம்மன் திருவிழா


கே.வி.குப்பம் அருகே கெங்கையம்மன் திருவிழா
x

கே.வி.குப்பம் அருகே கெங்கையம்மன் கோவில் திருவிழா நடந்தது.

வேலூர்

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அருகே கெங்கையம்மன் கோவில் திருவிழா நடந்தது.

கே.வி.குப்பத்தை அடுத்த கவசம்பட்டு கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா நடந்தது. இதனையொட்டி பொன்னியம்மனுக்கு பொங்கல் வைத்தல், மகாதீபாராதனை, அம்மன் வீதி உலா, கோலாட்டம், சிலம்பாட்டம், தாரை தப்பட்டை வாசிப்புடன் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கெங்கையம்மன் சிரசு ஊர்வலமும், பகல் 1 மணிஅளவில் அலங்கரிக்கப்பட்ட உடலில் சிரசைப் பொருத்தி கண்திறத்தல், கூழ்வார்த்தல், வாணவேடிக்கைகள் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனையொட்டி நடனம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜம்புலிங்க முதலியார், முன்னாள் தலைவர் மகாலட்சுமி பார்த்திபன், வக்கீல் மோ.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கவசம்பட்டு பொதுமக்கள், இளைஞர்கள் செய்துஇருந்தனர்.

===========

2 காலம்.


Next Story