தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகள்- முதல்வர் மறந்து விட்டாரோ..? அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவீட்


தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகள்- முதல்வர் மறந்து விட்டாரோ..? அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவீட்
x

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டுமென டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் நிகழும் ஆணவப்படுகொலை சம்பவங்கள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய டுவீட்டரில் கூறி இருப்பதாவது; தருமபுரி அருகே தந்தையே மகனை ஆணவ படுகொலை செய்ததாகவும், மருமகளை கொடூரமாக தாக்கியதாகவும் வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்குள் இரண்டு ஆணவ படுகொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க தனிசட்டம் இயற்றப்படும் என எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது கூறியதை முதல்வரான பின்னர் மறந்து விட்டாரோ என்று கருதத் தோன்றுகிறது.

தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story