வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்ட ஜெர்மன் நாட்டு தம்பதி
வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்ட ஜெர்மன் நாட்டு தம்பதி
கோயம்புத்தூர்
வால்பாறை
வால்பாறை பகுதிக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் வாரம் வரை தமிழகம் மற்றும் பிரான்ஸ், ஜெர்மன், சிங்கப்பூர், மலேசியா போன்ற ஒரு சில வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த நிலையில் ஆழியாறு பகுதியில் அறிவுத்திருக்கோவில் ஆசிரமத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் வால்பாறைக்கு வந்து செல்வார்கள். அந்த வகையில் அங்கு வந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலா தம்பதி யோதா, யுவா இருவரும் வால்பாறைக்கு வந்திருந்தனர். வால்பாறை நகராட்சி மார்க்கெட் பகுதியில் காய்கறி கடைகள் மற்றும் பல்வேறு கடைகளை பார்த்து ரசித்தனர். அப்போது வால்பாறை சுற்றுலா தலங்கள் இயற்கை அழகோடு அமைந்திருப்பதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story