ஜி.இ.டி. பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

பரதராமி ஜி.இ.டி. பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது.
வேலூர்
கே.வி.குப்பம்
குடியாத்தம் தாலுகா பரதராமியை அடுத்த வி.எஸ்.புரம் ஜி.இ.டி. பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கோவை சேர்ந்த ஆஸ்கார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் மாவட்ட அளவில் கலை, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கையெழுத்து ஆகிய போட்டிகளில் 180-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், மாவட்ட அளவில் ஜி.இ.டி. பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அ.மாதவமூர்த்தி தலைமை தாங்கினார். மேலாளர் மா.குருமூர்த்தி முன்னிலை வகித்தார். ச.கலையரசி, வரவேற்றார்.
ஒருங்கிணைப்பாளர் த.வனிதா, ஆசிரியர்கள் சி்ந்துஜா, மா.சு.அரவிந்தன், மனோஜ்குமார், உடற்கல்வி ஆசிரியர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story