ஆலங்குடியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து ராட்சத பலூன்


ஆலங்குடியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து ராட்சத பலூன்
x

ஆலங்குடியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற‌ 28-ந் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் செஸ் ஒலிம்பியாட் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி சார்பில், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவுரைப்படி ஆலங்குடி வடகாடு முக்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்றும், செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலங்குடி தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் தலைமை தாங்கி ராட்சத பலூனை பறக்க விட்டு தொடங்கி வைத்தார். திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி மற்றும் நகர செயலாளர் பழனிகுமார், நகர துணை செயலாளர் செங்கோல் அரசு ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றாக இணைந்து செஸ் போர்டு, செஸ் லோகோ இடம்பெற்றுள்ள பலூனை வானில் பறக்கவிட்டனர்.


Next Story