திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ராட்சத டிராகன் பொருட்காட்சி


திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ராட்சத டிராகன் பொருட்காட்சி
x

திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ராட்சத டிராகன் பொருட்காட்சி நடக்கிறது.

கரூர்

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ராட்சத டிராகன் பொருட்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜுராசிக் பார்கில் உள்ளதுபோல் டிராகன், டைனோசர், யானை, சிங்கம், புலி உள்ளிட்ட வன விலங்குகளுடன் ஜெயன்வீல், பிரேக் டான்ஸ், கொலம்பஸ், டிராகன் கோஸ்டர், ரிஸ்கோ கோஸ்டர், கிராஸ்வில், சிலம்பம், வாட்டர் போட்டார், பலூன் ரைடர், பேய் வீடு உள்ளிட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு களித்து மகிழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாடி மகிழும் வகையில் ராட்சத ராட்டினங்கள், ரெயில் பயணம் உள்ளிட்ட பல வகையான விளையாட்டுகள் உடன் வீட்டுக்கு தேவையான உபயோக பொருட்கள் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்டு மகிழ டெல்லி அப்பளம் உள்ளிட்ட விதவிதமான உணவு வகைகள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4.30 மணி முதல் இரவு 9:30 மணி வரை நாள்தோறும் செயல்படும் இப்பொருட்காட்சி வருகிற ஜனவரி மாதம் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது.


Next Story