ராட்சதமரம் விழுந்து 2 வீடுகள் சேதம்

ஆனைமலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ராட்சதமரம் விழுந்து 2 வீடுகள் சேதம் அடைந்தன.
ஆனைமலை
ஆனைமலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ராட்சதமரம் விழுந்து 2 வீடுகள் சேதம் அடைந்தன.
பலத்த காற்றுடன் மழை
ஆனைமலை தாலுகா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிர மாக பெய்து வருகிறது. இந்த நிலையில் ஆனைமலையை அடுத்த அம்பராம்பாளையம் செல்லும் வழியில் உள்ள சுந்தரபுரி பகுதி ைய சேர்ந்தவர்கள் தங்காய் (வயது 60), குருசாமி (36). கூலி தொழிலாளர்கள்.
இவர்களின் வீடுகள் அருகருகே உள்ளன. அவர்கள் நேற்று வேலைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் மதியம் 3 மணி அளவில் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்தது.
மரம் விழுந்து சேதம்
அப்போது திடீரென்று அங்கிருந்த 70 ஆண்டு பழமையான பெரிய மரம் வேருடன் சாய்ந்து தங்காய் மற்றும் குருசாமி ஆகியோரின் வீடுகளின் மீது விழுந்தது. இதில் தங்காயின் வீடு முற்றிலும் சேதம் அடைந்தது.
ஆனால் குருசாமி வீட்டில் ஒரு பகுதியில் மரக்கிளை விழுந்த தால் ஓடுகள் உடைந்தன. அவருடைய வீட்டின் சுற்றுச்சுவரும் சேதம் அடைந்தது. மரம் விழுந்த போது வீட்டில் யாரும் இல்லா ததால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்பட வில்லை .
மரம் விழுந்து வீடு முற்றிலும் சேதமடைந்தால் அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும் என்று தங்காய் கோரிக்கை விடுத்துள்ளார்






