மாநில அளவிலான கோ-கோ போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
ஓசூர் ஜான்போஸ்கோ மகளிர் பள்ளியில் மாநில அளவிலான கோ-கோ போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், 40-வது மாநில அளவிலான 18 வயதுக்குட்பட்ட இளையோர் பிரிவு மாணவிகளுக்கான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் சிவகங்கை அணியும் கிருஷ்ணகிரி வடக்கு அணியும் கலந்து கொண்டன. சிவகங்கை அணி முதலிடத்தையும், கிருஷ்ணகிரி வடக்கு அணி 2-ம் இடத்தையும், கோவை மற்றும் ஈரோடு அணிகள் 3, 4-ம் இடத்தையும் வென்றன. கிருஷ்ணகிரி வடக்கு மாவட்ட அணியை சேர்ந்த மாலா, சேசர் பட்டத்தையும், இன்பதமிழரசி ஆல்ரவுண்டர் பட்டத்தையும் சிவகங்கை அணி மாணவி ஜாய்ஸ் டிபென்டர் பட்டத்தையும் வென்றனர்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், புனித ஜான் போஸ்கோ பள்ளிகளின் தாளாளர் ஏஞ்சலா ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இதில் ஓசூர் சிப்காட் பிரைடு அரிமா சங்க தலைவர் மல்லேஷ், மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ், மாநில கோ-கோ கழக பொதுச்செயலாளர் நெல்சன் சாமுவேல், ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், மாநகராட்சி கவுன்சிலர்கள் பார்வதி, இந்திராணி, பாக்யலட்சுமி, காங்கிரஸ் நிர்வாகி சத்யமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.