மாணவ-மாணவிகளுக்கு பரிசு
ஓசூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி
ஓசூர்
ஓசூர் அருகே பேடரபள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் 6, 7, மற்றும் 8-ம் வகுப்பை சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற 9 பேர், சிறந்த ஓவியம் வரைந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பரிசளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சுனிதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் பொன்.நாகேஷ் வரவேற்றார்.
தனியார் நிறுவன மேலாளர் அனில்குமார் மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story