இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பரிசு


இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பரிசு
x

நாமக்கல்லில் குறும்பட போட்டியில் வெற்றிபெற்ற இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு குறும்பட போட்டி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 3 தொடக்க மற்றும் 3 உயர்தொடக்க நிலை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஷ்வரி சான்றிதழ் மற்றும் ரூ.2 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story