ஆட்டோ டிரைவர்களின் குழந்தைகளுக்கு பரிசு
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆட்டோ டிரைவர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய அனுமதி பெற்ற எஸ்.சி.-எஸ்.டி. ஆட்டோ டிரைவர்கள் நல சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களின் குழந்தைகள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த மாணவ-மாணவிகளை கவுரவிக்கும் விதமாக பரிசு வழங்கும் நிகழ்ச்சி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடந்தது. ஆட்டோ சங்க தலைவர் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார். செயலாளர் செல்வபாஸ்கரன், பொருளாளர் செல்வி மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற ஆட்டோ டிரைவர்களின் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தமிழரசன், மாரி, ராஜகோபால், சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story