பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 4 Aug 2023 12:30 AM IST (Updated: 4 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

தென்காசி

மேலகரம் அரசுப்பொது நூலகம் மற்றும் குறிஞ்சி வாசகர் பேரவை சார்பில் தென்காசி வட்டார பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பேரவை தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் காசிவிஸ்வநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் சங்கரநாராயணன் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். பல்வேறு பள்ளிகளில் இருந்தும் 40 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு பரிசு பெற்றனர்.

தென்காசி நூலகர் சுந்தர் வாழ்த்துரை வழங்கினார். நன்நூலகர் ராமசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் மேலகரம் (பொறுப்பு) நூலகர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story