மாணவர்களுக்கு பரிசு


மாணவர்களுக்கு பரிசு
x

மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி புதுமனை மகான் தைக்கா சாகிபு வலியுல்லாஹ் கந்தூரி விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான மதரஸா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உடன்குடி அனைத்து ஜமாத் தலைவர் வக்கீல் மகபூப் அலி தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் முகைதீன் அப்துல் காதர் வரவேற்று பேசினார். புதுமனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் இமாம் முகம்மது சபிக், தைக்கா பள்ளிவாசல் இமாம் முகம்மது ரபிக் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உடன்குடி கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் தேர்வுநிலை பேரூராட்சி உறுப்பினர் அஸ்ஸாப் கல்லாசி, 16-வது வார்டு உறுப்பினர் முகம்மது ஆபித் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

1 More update

Next Story