மாணவர்களுக்கு பரிசு


மாணவர்களுக்கு பரிசு
x

திருக்குறளுக்கு விளக்கஉரை எழுதிய மாணவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவருக்கும் நாளை இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகம் பரிசளிக்கப்பட்டது. அப்போது மாணவர்கள் நாள்தோறும் எழுதி வரும் திருக்குறள் மற்றும் அதன் விளக்க உரைக்கு தலா ஒரு ரூபாய் பரிசளிக்கப்படும் என அந்த இயக்கம் அறிவித்திருந்தது. இதில், 35 மாணவர்கள் கலந்து கொண்டு திருக்குறள் மற்றும் அதன் விளக்க உரையை எழுதி வந்தனர். அவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பாலசண்முகம் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் வாழ்க்கையில், மாணவர் பருவத்திற்கு மட்டுமின்றி அனைத்து நிலையில் உள்ளவர்களுக்கும் அறிவுரை கூறும் நூலாக திருக்குறள் உள்ளது. அதை மாணவர்கள் கற்றுத் தெரிந்து அதன்படி நடக்க வேண்டும் என்றார். மாணவ-மாணவிகளுக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செகுரா பரிசளித்தார்.


Next Story