தர்மபுரி மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் இஞ்சி கிலோ ரூ.280-க்கு விற்பனை

தர்மபுரி:
தமிழகத்தில் தக்காளி, சின்னவெங்காயம், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் கடந்த வாரம் ஒரு கிலோ இஞ்சி ரூ.275 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ இஞ்சி ரூ.274-க்கு விற்பனையானது. நேற்று கிலோவுக்கு ரூ.14 குறைந்தது. சந்தைக்கு இஞ்சி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ இஞ்சி ரூ.260-க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.270 முதல் ரூ.280 வரை விற்பனை செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





