செஞ்சி பஸ் நிலையம் இடமாற்றம்
ரூ.6¾ கோடியில் விரிவாக்க பணியால் செஞ்சி பஸ் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது.
விழுப்புரம்
செஞ்சி:
செஞ்சி பஸ் நிலையம் ரூ.6 கோடியே 74 லட்சத்தில் விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக பஸ் நிலையத்தில் ஒருபுறமுள்ள கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இந்த பணிக்காக செஞ்சி பஸ் நிலையம், தற்காலிகமாக திண்டிவனம் சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் இருந்து கூட்ரோடு வரை உள்ள கழிவுநீர் கால்வாயும் விரிவுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அதிகாரிகளின் அறிவிப்பு படி பெரும்பாலான பஸ்கள் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்வதில்லை. மாறாக செஞ்சி கூட்டு சாலையிலேயே பயணிகளை ஏற்றவும், இறக்கவும் செய்கிறார்கள். இதனால் கூட்ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அனைத்து பஸ்களும் தற்காலிக பஸ் நிலையத்திற்கு சென்று வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
Related Tags :
Next Story