பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு


பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
x

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விருதுநகர்

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குழந்தை திருமணம், மாயமாகும் பெண்கள், போக்சோவில் வாலிபர் கைது என தொடர்ந்து சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுபடியும், திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுரையின்படியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அ.முக்குளம் போலீஸ் நிலையத்தின் சார்பில் புல்வாய்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளிடம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் கூறுகையில், குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் யாராவது ஈடுபட்டாலோ, குழந்தைகளுக்கு வேறு எந்த பிரச்சினை இருந்தாலும் உடனடியாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார். இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story