தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
சுல்தான்பேட்டை
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் சித்ரா(வயது 24). இவருக்கும், மங்களூருவை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சைதன்யா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷை பிரிந்த சித்ரா தனது குழந்தையுடன் சுல்தான்பேட்டை அருகே கரையாம்பாளையத்தில் உள்ள உறவினர் சந்தோஷ் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கிருந்து கூலி வேலை செய்து, குழந்தையை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவில் சந்தோஷ் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதை சித்ரா கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்ட சந்தோஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார். சிறிது நேரத்தில் வீடு திரும்பியபோது சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.