இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

மூலைக்கரைப்பட்டியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் உலகநாதன் மகன் சுரேஷ் (வயது 32). இவருடைய மனைவி மகராசி (30). இந்த தம்பதிக்கு சுபிக்ஷன் (6) என்ற மகன் உள்ளார். சுரேஷ் குடும்பத்துடன் மூலைக்கரைப்பட்டி, தான்தோன்றி கிராமத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். தற்போது துபாயில் கேட்டரிங் வேலை செய்து வந்த சுரேஷ், கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த மகராசி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அப்போது வீட்டுக்கு வந்த சுரேஷ் அதிர்ச்சி அடைந்து, மயங்கிய நிலையில் இருந்த மகராசியை மீட்டு மூலைக்கரைப்பட்டி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மகராசி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகராசி என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மகராசிக்கு திருமணம் ஆகி 7 வருடத்திற்குள் இருப்பதால், உதவி கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

1 More update

Related Tags :
Next Story