தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
புதுக்கடை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கடை:
புதுக்கடை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளம்பெண்
புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணம் பனங்கால் முக்கு பகுதியை சேர்ந்தவர் லாசர். இவருடைய மனைவி ஜெயா. இவர்களுக்கு சிவரஞ்சனி(வயது 20) என்ற மகள் உள்ளார். இவர் தேங்காப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். லாசரும், அவரது மனைவியும் முந்திரி ஆலையில் வேலை செய்து வருகின்றனர்.
சிவரஞ்சனிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். ஆனால், சிவரஞ்சனி தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்தநிலையில் சம்பவத்தன்று இதுதொடர்பாக சிவரஞ்சனிக்கும் அவரது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சிவரஞ்சனி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். சிறிது நேரத்தில் அவரது பெற்றோர் வழக்கம்போல் முந்திரி ஆலைக்கு வேலைக்கு சென்று விட்டனர். இதையடுத்து மனமுடைந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிவரஞ்சினி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக ஜெயா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜேசுராஜ சேகர் விரைந்து சென்று சிவரஞ்சனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவரஞ்சனி காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.