இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தாயாருக்கு வீடியோ அனுப்பி விட்டு இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணபதி
தாயாருக்கு வீடியோ அனுப்பி விட்டு இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளம்பெண்
கோவை கணபதி மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகள் கவுசல்யா (வயது19). இவர் டவுன் ஹாலில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். அவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் கவுசல்யாவின் அண்ணன் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு மதியம் வந்தார். அவர் கவுசல்யாவை சாப்பிட அழைப்பதற்காக அவருடைய அறைக்கு சென்றார். அந்த அறைக் கதவு சாத்தப்பட்டு இருந்தது. உடனே அவர் அந்த கதவை திறந்து பார்த்த போது கவுசல்யா தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.
தற்கொலை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது தந்தை உதவியுடன் கவுசல்யாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கவுசல்யா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறும்போது, கவுசல்யா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது தாயாருக்கு வாட்ஸ்- அப்பில் ஒரு வீடியோ அனுப்பி உள்ளார்.
அதில், தனக்கு வாழ பிடிக்க வில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் கூறி இருக்கிறார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது என்றனர்.