இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆலங்காயம் அருகே நிம்மியம்பட்டு கிராமத்தை அடுத்த முல்லை பகுதியை சேர்ந்தவர் ஆனஸ்ட் ராஜ். இவர் ஒடிசா மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

இவரும் வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்த இவரது தாய்மாமன் மகள் அஸ்வினியும் (வயது 23) காதலித்து வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக அஸ்வினு உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் குணமாகவில்லை. இந்த நிலையில் அஸ்வினி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.வெளியே சென்றிருந்தவர்கள் வீடு திரும்பியபோது அஸ்வினி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர மீட்டு நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அஸ்வினி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story