தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 6 May 2023 1:15 AM IST (Updated: 6 May 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கணபதியில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

கணபதி

கணபதியில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குடும்ப தகராறு

கோவை கணபதி ராஜீவ் காந்தி ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 31). இவருடைய மனைவி ரேவதி(28). இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக ரேவதி கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதற்கிடையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரேவதி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சரவணம்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story