தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

அடகு வைத்த நகையை திருப்பி தராததால் விரக்தி அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ெதாடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
தொண்டி,
அடகு வைத்த நகையை திருப்பி தராததால் விரக்தி அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ெதாடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
நகையை திருப்பி தரவில்லை
திருவாடானை அருகே சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சித்திரைச் செல்வி (வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. பவிஷா என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது.
திருமணத்தின் போது சித்திரைச்செல்விக்கு வரதட்சணையாக கொடுத்த நகையில் 12 பவுன் நகையை அவரது கணவர் வாங்கி அடகு வைத்து இருந்தாராம். நகையை திருப்பித் தருமாறு சித்திரைச்செல்வி கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கேட்டு வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தூக்குப்போட்டு தற்ெகாலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக சித்திரைச் செல்விக்கும் குடும்பத்தில் இருந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு சித்திரைச் செல்வி தற்கொலை செய்து கொண்டாராம். தகவல் அறிந்த திருவாடானை போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சித்திரைச் செல்வியின் தந்தை ராமசாமி திருவாடானை போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருவாடானை போலீஸ் சூப்பிரண்டு நிரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. கோபு நேரில் விசாரணை நடத்தினார்.