குள்ளஞ்சாவடி அருகே வேன் கவிழ்ந்து பெண் சாவு


குள்ளஞ்சாவடி அருகே வேன் கவிழ்ந்து பெண் சாவு
x

குள்ளஞ்சாவடி அருகே வேன் கவிழ்ந்து பெண் உயிரிழந்தார். மேலும் 19 பேர் காயமடைந்தனர்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த 20 பேர், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள ஹரிராஜபுரம் கிராமத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒருவேனில் புறப்பட்டனர். இவர்களது வேன், குறிஞ்சிப்பாடி அடுத்த குள்ளஞ்சாவடி பள்ளி நீர் ஓடை கிராமம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் கவிழ்ந்தது.

19 பேர் காயம்

இதில் வேனில் பயணம் செய்த, பாலமுருகன் மனைவி அஞ்சலை (வயது 42), சண்முகம் மனைவி ஜெயப்பிரியா (38), பழனிவேல் (53), பரசுராமன் மனைவி அஞ்சயா (32), இவருடைய மகள் சத்யபிரியா (13), ரங்கநாதன் (22), ராஜாராம் மனைவி சசிகலா (30), ராமச்சந்திரன் மனைவி அஞ்சலை (45) உள்பட 20 பேர் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சசிகலா மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 19 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்தத புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story