மின்னல் தாக்கி பெண் சாவு


மின்னல் தாக்கி பெண் சாவு
x

மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழந்தார்

மதுரை

அவனியாபுரம்

மதுரை அவனியாபுரத்தை அடுத்த பெரிய ஆலங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தொட்டியபட்டி காலனியை சேர்ந்தவர் குமார். கொத்தனார். இவருடைய மனைவி தேவிகா(வயது 38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது தேவிகா வீட்டின் முன்புறம் கொடியில் காய வைத்த துணிகளை எடுப்பதற்காக சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் தேவிகா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் பெருங்குடி சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story