ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி டிரைவருக்கு 5 ஆண்டு சிறை


ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி டிரைவருக்கு 5 ஆண்டு சிறை
x

ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு கோா்ட்டு உத்தரவிட்டது.

ஈரோடு

ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பாலியல் தொல்லை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் கடந்த ஆண்டு மே மாதம் 11-ந் தேதி யஸ்வந்த்பூருக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தார். அந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்தை கடந்து சேலம் நோக்கி சென்றபோது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இதை பார்த்த சிறுமியின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். அந்த நபரை சக பயணிகள் பிடித்து, ரெயில் சேலம் சென்றடைந்த பிறகு அங்குள்ள ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். இந்த புகார் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பிடிபட்ட அந்த நபரும் ஈரோடு ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

5 ஆண்டு சிறை

போலீஸ் விசாரணையில் அந்த நபர் கோவை சிவானந்தாகாலனி கண்ணுசாமி கவுண்டர் லே அவுட் பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான கமலநாதன் (வயது 35) என்பதும், முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியில் பயணம் செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலநாதனை கைது செய்தனர். மேலும், அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் அவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக கமலநாதனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜராகி வாதாடினார்.


Related Tags :
Next Story