சிறுமி கர்ப்பம்; காதலன், நண்பர்களிடம் போலீசார் விசாரணை


சிறுமி கர்ப்பம்; காதலன், நண்பர்களிடம் போலீசார் விசாரணை
x

சிறுமி கர்ப்பம் தொடர்பாக காதலன், நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி

திருச்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியை அவருடைய பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். அப்போது, அந்த சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுபற்றி திருச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பொன்மலைப்பட்டியை சேர்ந்த ஒரு வாலிபர், அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததும், அந்த வாலிபரின் நண்பர்கள் சிலரும் அவ்வப்போது, சிறுமியை பாலியல் தொல்லை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியின் காதலன் மற்றும் அவருடைய நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story