சிறுமி பாலியல் பலாத்காரம்; பெயிண்டர் போக்சோவில் கைது


சிறுமி பாலியல் பலாத்காரம்; பெயிண்டர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 25). பெயிண்டர். இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் தனியாக சந்தித்து பேசி வந்தனர். இதற்கிடையே சிறுமியை ஆசைவார்த்தை கூறி பார்த்தீபன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். இதைதொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததும், ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று பார்த்தீபன் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் பார்த்தீபனை கைது செய்தனர். கடந்த சில மாதங்களாக பொள்ளாச்சி, ஆனைமலை வட்டாரங்களில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story