நாகர்கோவிலில் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா


நாகர்கோவிலில் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா
x

நாகர்கோவிலில் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவிலில் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பிறந்த நாள் விழா

குமரி கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே. மூப்பனார் பிறந்த நாள் விழா நாகர்கோவிலில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அபய கேந்திரத்தில் உள்ள முதியவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் டி.ஆர். செல்வம் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொருளாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பொன் மாதவன். மாநகர தலைவர் சேகர், மகளிர் அணி செல்வி விலாஸ்குமார், இளைஞர் அணி புரூனோ ரஞ்சித், வட்டார தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story