சுரண்டையில் காமராஜர் சிலைக்கு ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை


சுரண்டையில் காமராஜர் சிலைக்கு ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை
x

சுரண்டையில் காமராஜர் சிலைக்கு ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தென்காசி

சுரண்டை:

த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி தென்காசி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்தார். தென்காசி மாவட்டம் உருவான பின்னர் முதல்முறையாக சுரண்டைக்கு வருகை தந்த அவருக்கு, மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ் தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்றனர். தொடர்ந்து சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜர் சிலைக்கு ஜி.கே.வாசன் மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சிலுவை, மாவட்ட தலைவர்கள் அய்யாத்துரை (தென்காசி), முருகேசன் (நெல்லை), ராஜபாண்டியன் (சிவகாசி), சுரண்டை நகர தலைவர் அருண் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர் அருகே காசிதர்மம் பஞ்சாயத்து கூட்டரங்கில் காமராஜர் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் சுடலைமாடத்தி தலைமை தாங்கினார். துணை தலைவர் தங்கம் அய்யாதுரை முன்னிலை வகித்தார்.

விழாவில் ஜி.கே.வாசன் எம்.பி. கலந்துகொண்டு காமராஜர் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், "தேர்தல் வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கொடுத்த வாக்குறுதியை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. தி.மு.க.வின் மீது பாஜ.க. தலைவர் அண்ணாமலை கூறும் ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையே. அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை" என்றார்.

பேட்டியின்போது மாவட்ட பொருளாளர் குலாம் முகம்மது, வட்டார தலைவர் முருகன், மாநில இளைஞரணி செயலாளர் யுவராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பூமாரி, துணை தலைவர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story