அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு


அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு
x

அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் பகுதியில் நேற்று மதியம் 3 மணி அளவில் பயணிகளை ஏற்றி கொண்டு 2 அரசு பஸ்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது மோட்டார்சைக்கிளில் ஹெல்ெமட் அணிந்துகொண்டு வந்த 2 மர்மநபர்கள் திடீரென அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனால் பயணிகள் சிரமப்பட்டனர். இதேபோல் பேராவூரணி பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மர்மநபர்கள் அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஹெல்ெமட் அணிந்து வந்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இதேபோல் அதிராம்பட்டினத்தில் 3 பஸ்களின் கண்ணாடிகளை மர்மநபர்கள் கல்வீசி உடைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story