தங்க கொடிமரத்தை சுற்றி கண்ணாடி கூண்டு அமைப்பு


தங்க கொடிமரத்தை சுற்றி கண்ணாடி கூண்டு அமைப்பு
x

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தங்க கொடிமரத்தை சுற்றி கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டு வருகிறது.

வேலூர்

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் புரனமைக்கப்பட்டது. மேலும் கோவிலில் அம்மன் சன்னதி கொடிமரம், சாமி கொடிமரம், கலசங்களுக்கு தங்க தகடுகள் பதிக்கப்பட்டன. மேலும் புதிதாக தங்க தேரும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மன் சன்னதி கொடிமரம் மற்றும் சாமி கொடிமரம் ஆகியவற்றை கைகளால் தொட்டு வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் அம்மன் சன்னதி கொடி மரத்தை சுற்றி பக்தர்கள் தொடாத வகையில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது. தற்போது சாமி கொடிமரத்தை சுற்றியும் நேற்று கண்ணாடி கூண்டுகள் அமைக்கப்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்க கொடி மரத்தை தொட்டு வழிபடுகின்றனர். இதனால் கொடிமரத்தின் பாலீஷ் தன்மை இழக்கும் நிலை ஏற்பட்டது. எனவே அதை தடுக்கும் வகையில் கொடிமரத்தை சுற்றி கண்ணாடி கூண்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story