பெருந்துறை கோவில் கருவறைக்குள் சென்று ௨-வது நாளாக அமா்ந்திருந்த காகம்


பெருந்துறை கோவில் கருவறைக்குள் சென்று ௨-வது நாளாக அமா்ந்திருந்த காகம்
x
தினத்தந்தி 19 Oct 2023 1:50 AM IST (Updated: 19 Oct 2023 1:51 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை கோவில் கருவறைக்குள் சென்ற காகம் ௨-வது நாளாக நேற்றும் அம்மன் பீடத்தில் அமா்ந்திருந்தது.

ஈரோடு

பெருந்துறை குன்னத்தூர் ரோடு பெத்தாம்பாளையம் பிரிவில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு கருவறைக்குள் புகுந்த காகம் ஒன்று விநாயகரின் பீடத்தில் பொருத்தி இருக்கும் பித்தளை திருவாச்சியில் (அலங்கார வளைவு) ஏறி அமர்ந்து கொண்டது. நேற்று முன்தினம் இ்ரவு முழுவதும் கோவில் கருவறைக்குள்ளேயே அந்தக் காகம் அமர்ந்திருந்தது. இதை பார்த்த பக்தர்கள் பலரும் விநாயகருடன் சேர்த்து அந்த காகத்தையும் பயபக்தியுடன் வணங்கிச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவிலுக்கு பூசாரி வழக்கம்போல் பூஜை செய்ய வந்தார். அப்போது கருவறைக்குள் 2-வது நாளாக காகம் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு, அது அமர்ந்திருந்த பித்தளை திருவாச்சியை அப்படியே கருவறையில் இருந்து எடுத்து வெளியே வைத்தார். ஆனால் அந்தக் காகம் அங்கிருந்து நகரவே இல்லை. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

பொதுவாக மனிதர்கள் அருகே வந்தால் காகம் பறந்தோடி விடும். ஆனால் இந்த காகம் கோவிலுக்கு வந்த யாரையும் கண்டு பயப்படாமல் அது அமர்ந்த இடத்திலேயே நேற்றும் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெருந்துறை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story