ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை


ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை
x

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை நடந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி கோ பூஜை நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு ராஜகோபால சுவாமி விஸ்வரூப தரிசனமும், அதனை தொடர்ந்து கருடன் சன்னதி முன்பு கோ பூஜையும் நடைபெற்றது. பசு மற்றும் கன்றுக்கு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் லட்சுமி அஷ்டோத்திர சிறப்பு பூஜைகளும், குங்கும அர்ச்சனையும் நடைபெற்றது.

தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களும் பசுவிற்கு அகத்திக்கீரை- பழ வகைகளை வழங்கி வழிபாடு செய்தனர்.


Next Story