சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் கோலப்போட்டி


சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் கோலப்போட்டி
x

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் கோலப்போட்டி நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் ஆண்டுதோறும் ஆவணி மாதம் கொடைவிழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடைவிழா நேற்று காலை தொடங்கியது. வருகிற 25-ந் தேதி வரை 6 நாட்கள் விழா நடக்கிறது

முதல் நாளான நேற்று காலை சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. காலையில் கோவில் வளாகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாலையில் பெண்களுக்கான கலர் கோலப்போட்டி நடந்தது. போட்டியில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

போட்டியில் திசையன்விளை பிரதிபா என்பவருக்கு முதல்பரிசும், முருகேசபுரம் சஸ்மிதா என்பவருக்கு 2-வது பரிசும், திசையன்விளை ரஜிதா என்பவருக்கு 3-வது பரிசும் கிடைத்தது. போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் தங்கையா சுவீட்ஸ், மலையாண்டி டிம்பர் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஏரல் சின்னத்துரை அன்கோ சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கோப்பையும், பரிசும் வழங்கப்பட்டது. இரவு பல்சுவை கலைபோட்டிகள், இன்னிசை கச்சேரி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் செய்துள்ளார்.

1 More update

Next Story