மொடக்குறிச்சி அருகே 5 குட்டிகள் ஈன்ற ஆடு
மொடக்குறிச்சி அருகே 5 குட்டிகள் ஈன்ற ஆடு
ஈரோடு
மொடக்குறிச்சி
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அய்யகவுண்டன்பாளையம் பாலிக்காடு பகுதியில் வசித்து வருபவர் செங்கோட்டையன். விவசாயி. இவர் தன்னுடைய வீட்டின் அருகிலேயே பட்டி அமைத்து வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். இதில் சினையாக இருந்த ஒரு ஆடு நேற்று முன்தினம் 5 குட்டிகளை ஈன்றது. ஒரு ஆடு ஒரு குட்டியை ஈனும், அதிசயமாக சில ஆடுகள் 2 குட்டிகளை ஈனும். ஆனால் செங்கோட்டையனின் ஆடு 5 குட்டிகளை ஈன்றது அனைவரையும் பெரும் வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அக்கம்பக்கத்து மக்கள் 5 குட்டிகளையும், அவைகளை ஈன்ற ஆட்டையும் வந்து பார்த்து செல்கிறார்கள்.
Related Tags :
Next Story