மேச்சேரி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
மேச்சேரி:-
மேச்சேரியில் ஆட்டுச்சந்தை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டு சந்தைக்கு மேச்சேரி, நங்கவள்ளி ஒன்றிய பகுதிகளில் இருந்தும், தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை, ஏரியூர். சின்னப்பள்ளி, பூச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆடுகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டு வருவார்கள். ஆடுகளை வாங்குவதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வளர்ப்பதற்காகவும், இறைச்சிக்காகவும் வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் நேற்று மேச்சேரியில் ஆட்டு சந்தை கூடியது. ஆனால் வழக்கமாகும் விற்பனையாகும் ஆடுகளை விட மிக குறைந்த அளவில் தான் ஆடுகள் விற்பனை ஆனது. ஆடு விற்பனை மந்தமானது குறித்து வியாபாரிகள் கூறும் போது, ஆடி மாதம் தற்போது தான் ெதாடங்கி உள்ளதால் ஆடு விற்பனை மந்தமாக இருந்தது. அதே நேரத்தில் வரும் வாரங்களில் மாரியம்மன் கோவில் பண்டிகைகள் அதிகளவில் நடைபெறும் என்பதால் சந்தைக்கு ஆடுகள் வரத்தும், விற்பனையும் அதிகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.