கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்


கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 6 Oct 2023 4:05 PM IST (Updated: 6 Oct 2023 5:08 PM IST)
t-max-icont-min-icon

மூலனூர் பகுதியில் வறட்சி காரணமாக கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம் அடைந்தது.

திருப்பூர்

மூலனூர்,

மூலனூர் பகுதியில் வறட்சி காரணமாக கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம் அடைந்தது.

ஆட்டுச்சந்தை

தமிழகத்தில் நடைபெறும் முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச் சந்தையாகும். இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இவற்றை வாங்குவதற்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை நகரங்களை சேர்ந்த வியாபாரிகள் வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நடந்த சந்தையில் வியாபாரம் மந்தமாக இருந்தது.. கடந்த 2 வாரங்களாகவே கடும் வெப்பம் காரணமாக சற்று வியாபாரம் குறைந்து வந்தது. இதனால் ஆடுகளின் விலை சற்று குறைவாகவே இருந்தது. இந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.550-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விலை

அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ. 5500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் 6000-க்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.



Next Story