கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம் அடைந்துள்ளது.


கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம் அடைந்துள்ளது.
x

கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம் அடைந்துள்ளது.

திருப்பூர்

மூலனூர்

கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம் அடைந்துள்ளது.

கன்னிவாடி சந்தை

தமிழகத்தில் நடைபெறும் ஆட்டுச்சந்தைகளில் முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச் சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.

இங்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டு சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

ஆடுகள் விற்பனை மந்தம்

அதேபோல் கன்னிவாடி, மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர். கடந்த 2 வாரங்களாகவே அதிகாலை நேரங்களில் கடும் வெப்பம் காரணமாக சற்று வியாபாரம் குறைந்து வந்தது. ஆனால் இந்த வாரம் நேற்று இரவு முழுவதுமே கடுமையான வெயில் காரணமாக, அதிகாலை நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக விவசாயிகளின் வருகை குறைவாகவே இருந்து வந்தது.

இதனால் ஆடுகளின் விலை சற்று குறைவாகவே இருந்தது. இந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.550-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூ.5,500 ஆகும். இந்த வாரம் 6000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.



Next Story