ஆடு திருடியவர் கைது


ஆடு திருடியவர் கைது
x

நெல்லை அருகே ஆடு திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

நாங்குநேரி அருகே தெய்வநாயகபேரி நடுத்தெருவை சேர்ந்தவர் கந்தவேல் மகன் பெருமாள் (வயது 36). இவர் தனது நண்பர்கள் இசக்கிமுத்து, முருகன், ஆனந்த் ஆகியோருடன் சேர்ந்து சுமார் 700 ஆடுகளை வளர்த்து வருகிறார். நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த மேலக்கல்லூர் ரெயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் இரவு இவர்களது மந்தையில் இருந்த 2 ஆடுகளை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திருடினர். இதனைக் கண்ட பெருமாள் கூச்சலிடவே 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்நிலையில் நடுக்கல்லூர் அரசு மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வடக்கு சங்கன்திரடு பார்வதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாலையப்பன் மகன் இசக்கி பாண்டி என்ற மணி, திருடி சென்ற ஆடுகளுடன் காயமடைந்த நிலையில் மயங்கி கிடந்தார். மற்றவர்கள் தப்பி சென்று விட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் இசக்கி பாண்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருமாள் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்குப்பதிவு செய்து, ஆடு திருடியதாக வடக்கு சங்கன்திரடு பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் இசக்கிபாண்டி என்ற பாஸ்கரை (26) கைது செய்தார். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.


Next Story